Friday, May 26, 2017

ஆசிரியர்கள் வருமான வரி கணக்கை சமர்பிப்பது (INCOME TAX RETURN FILE) எப்படி?

ஒவ்வொரு மாதமும் பள்ளியில் உங்கள் வருமானத்தில் இருந்து வரியை பிடித்தம் செய்து அதனை அரசுக்கு அளிக்கப்படும்.  இவ்வாரு  நம் சம்பளத்திலேயே பிடித்தம் செய்யப்படுவது  Tax Deducted at Source  என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதன் சுருக்கம்  TDS   என்பதாகும்.
ஆசிரியர் யாருக்கெல்லாம் டிடிஎஸ் பிடிக்கப்பட்டுள்ளதோ அவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை தலைமை ஆசிரியர் (PAY DRAWING OFFICER) அளிக்க வேண்டும் என்று வருமான வரிச் சட்டம் கூறுகின்றது. ஆசிரியர்களுக்கு (FORM 16)  படிவம் 16-ஐ மே 31-ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 தலைமை ஆசிரியர்  (PAY DRAWING OFFICER) TDS  Return செய்து பிறகுதான் வருமான வரி தாக்கல் (INCOME TAX FILE return)  செய்ய முடியும்.
வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய இணைப்பு: https://www.tnincometax.gov.in/ அதில் FILE RETURN ONLINE என்ற பகுதிக்கு செல்லவும். அதில் New to e-Filling? கீழ் Register Yourself என்ற பகுதிக்கு செல்லவும்.  அடுத்து வரும் பக்கத்தில் Individual என்பதை தேர்வு செய்து Continue என்பதை கிளிக் செய்யவும்  அடுத்து வரும் பக்கத்தில் உங்களது PAN எண்ணை இடுங்கள். உங்களது PAN எண் தான் உங்களின் USER ID. அடுத்து வரும் பக்கத்தில், உங்கள் விவரங்களை  பதியவும். உங்களுக்கு மின்னஞ்சல்  முகவரி அவசியம். மேற்கண்ட விவரங்களை பூர்த்தி செய்த பிறகு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். அதில் சென்று  இணைப்பை பயன்படுத்தி  வருமான வரி தாக்கல் செய்யலாம்.
 வருமான வரி தாக்கல் படிவத்தைத் தரவிறக்கம் செய்ய  https://incometaxindiaefiling.gov.in/ என்ற பக்கத்தில் உள்ள  Downloads -AY 2017-18  என்பதில் சென்று ITR-1 Excel படிவத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .
முதலில் இந்த  Excel படிவத்தில்  Macro Enable செய்துகொள்ளுங்கள்.
நம்மிடம் உள்ள (FORM 16) படிவம்16-ல் உள்ள விவரங்களை பயன்படுத்தி விண்ணப்பப் படிவத்தை நிரப்புங்கள். படிவத்தில் உள்ள தொடர்புடைய பச்சை நிறக்கட்டங்களை மட்டும் நிரப்பவும்.
ஒவ்வொரு பக்கத்தையும்  நிரப்பிய பின்னர்  Validate என்பதனைக் கிளிக் செய்து விவரங்கள்  விடுபட்டிருக்கிறதா என்று சரி பார்க்கவும்.
அதன் பின் அடுத்த பக்கம் சென்று அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த
பின்னர், முதல் பக்கம் வந்து
Calculate Tax என்பதை கிளிக் செய்தால்  படிவம் முழுதும் நிரப்பப்பட்டு விடும்.அதன் பின், Generate XML என்பதனைச் கிளிக் செய்யவும். பிறகு புதிய பக்கத்தில் "Save XML" என்பதனைச் கிளிக் செய்தால் நாம்  தாக்கல் செய்ய வேண்டிய படிவம்  XML வடிவத்தில்  நம் கணிணியில் இருக்கும்.  நிரப்பிய படிவத்தைத் தளத்தில் பதிவேற்றும் செய்ய  உங்கள் கணக்கிற்குள் உள்நுழைந்து அங்கு உள்ள   e-File என்பதன் கீழே உள்ள Upload Return  என்ற பக்கத்திற்குச் செல்லுங்கள்  அதில் ASSESMENT YEAR செலக்ட் செய்து பிறகு ITR FORM Name என்பதில் ITR1 என்பதை தேர்வு  செய்யவும்  அடுத்து Attach the ITR XML file என்பதில் உங்கள் கணிணியில் சேமிக்கப்பட்ட XML கோப்பைப் பதிவேற்றுங்கள். Do you want to digitally sign? என்பதை  No  செலக்ட் செய்து Submit செய்யவும்.  தற்போது நீங்கள் உங்கள்  வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்து விட்டீர்கள்.  பிறகு வரும் ஒப்புகை படிவத்தை  பெறுங்கள்.   வந்த ஒப்புகை படிவத்தை   ITR-V அச்சிட்டு கையொப்பமிட்டு, கீழ்காணும் முகவரிக்கு  விரைவு அஞ்சல் மூலம் அனுப்பவேண்டும்.
Income Tax Department – CPC,
Post Bag No - 1, Electronic City Post Office,
Bengaluru - 560100, Karnataka
வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31

Author : Ganesan MG // 7:02 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.

Followers