Wednesday, May 6, 2020

கூகுள் வகுப்பறை (Google Class Room)


 
விடுமுறை காலங்களில் நம் மாணவர்களுக்கு வீட்டிலிருந்தபடியே பாடங்களை நடத்த உதவும் செயலிகளில் முதன்மையானது இந்த  Google Class Room செயலி.
கூகுள் வகுப்பறையானது நாம் ஒரு பாடத்தை  யூடியூப் மூலமாக   நடத்தி  அதனை நாம் பதிவேற்றம் செய்து அப்படி நடத்திய வீடியோவை  Google Classroom இல் மாணவர்களுக்கு பகிரலாம். மேலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்களை  (assignment)வழங்கி அதை திருத்தி  மாணவர்களுக்கு வழங்கிட முடியும்.  ஒரு ஆன்லைன் தேர்வு நடத்தி அவர்களுக்கு அதை திருத்தி  கொடுக்கலாம்

இதற்கு நமக்கும் மற்றும் மாணவர்களுக்கும்  கூகுள் மின்னஞ்சல் இருக்கவேண்டும்.

உங்கள் ஜீமெயிலுக்கு செல்லவும்.


வலது மேற்புறத்தில் இருக்கும் + பட்டனை அழுத்தினால் உங்களுக்கு இரண்டு ஆப்சன்கள் தோன்றும் 

>> Join Class 

>> Create Class 

Join Class – மாணவர்கள் கிளிக் செய்து ஆசிரியர் அனுப்பிய Code உள்ளீடு செய்து  வகுப்பில் இணையலாம் .
 நாம் Create Class ஆப்சனை கிளிக் செய்து

விதிமுறைகளை படித்து அந்த ஆப்சனை டிக் செய்து continue கொடுக்கவேண்டும்.
இப்போது பின்வரும் படத்தில் இருக்கின்ற ஆப்சன்கள்  பூர்த்தி செய்யவேண்டும்,

 இப்பொழுது உங்களுக்கான வகுப்பறை தயார்.

அடுத்து மாணவர்களை  சேர்க்க வேண்டும். இதற்கு  அவர்களுடைய மின்னஞ்சல் முகவரியை people க்கு அருகே இருக்கும் பட்டனை அழுத்தி அதில் கொடுத்து சேர்க்கலாம். அல்லது அங்கு காட்டப்படும் Code மாணவர்களுக்கு அனுப்பி வகுப்பில் சேர்ந்துகொள்ள முடியும்









 Class Work என்ற பகுதிக்கு சென்று அங்கே நாம் மாணவர்களுக்கு பாடத்தை  யூடியூப் மூலமாக   நடத்தி  அதனை நாம் பதிவேற்றம் செய்யமுடியும், Assignment கொடுக்க முடியும், ஆன்லைன் தேர்வுகளை நடத்த முடியும்

இவை அனைத்தையுமே மாணவர்கள் தங்களது  மொபைல் போன்களில் கூகுள் கிளாஸ்ரூம் ஆப் மூலம் பயிற்சி பெறலாம்.










Author : tipsdocs // 11:37 PM

2 comments:

 
Powered by Blogger.