Saturday, August 11, 2012

கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்


கீபோர்ட்  ஷார்ட்கட்ஸ்





            கீபோர்ட்  ஷார்ட்கட்ஸ்  என்பவை நம் வேலையை எளிதாக்க உதவுபவை, நாம் நமது மவுஸை பயன்படுத்தி தேடிக் கொண்டிருக்காமல், மிக விரைவில் ஒரு வேலையை முடித்துவிடலாம் இவற்றில் சில எப்போதும் பயன்படும். அந்த வகையில் கணினியை பயன்படுத்தும் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பத்து கீபோர்ட்  ஷார்ட்கட்ஸ்

Ctrl + C
Ctrl + Insert

ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை நாம் காப்பி  செய்ய பயன்படுகிறது. 

Ctrl + V
Shift + Insert
வார்த்தை அல்லது வாக்கியத்தை நமக்கு வேண்டிய இடத்தில் ஒட்ட paste  செய்ய உதவுகிறது. 

Ctrl + Z  இந்த வசதி, நீங்கள் தற்போது இருக்கும் நிலைக்கு முந்தைய நிலைக்கு செல்ல உதவுகிறது. Undo
Ctrl + Y இது நீங்கள் தவறுதலாக Undo செய்தவற்றை Redo செய்ய உதவும் 



Ctrl + F  குறிப்பிட்ட கோப்பு, போல்டர், இணைய உலவியில் உங்களுக்கு தேவையான வார்த்தை மற்றும் வாக்கியங்களை தேட உதவுகிறது. 

Alt + Tab
Alt + Esc

நீங்கள் இயங்கி கொண்டுள்ள ப்ரோக்ராம்களுக்கு வேகமாக செல்ல உதவுகிறது. இதில் Alt+Tab மூலம் குறிப்பிட்ட ஒன்றுக்கு செல்லலாம்.Alt + Esc மூலம் ஒவ்வொன்றுக்கும் வரிசையாக செல்ல முடியும். 



CTRL+ Tab - குறிப்பிட்ட Program-இல உள்ள வெவ்வேறு Tab-களுக்குள் மாறிக் கொள்ளலாம். உதாரணம் Firefox, Chrome. 

Alt+ Tab Forward ஆக ப்ரோக்ராம்களை காட்டினால், Alt+Shift+Tab இதை பின்னால் இருந்து காட்டும். நிறைய வேலைகளை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு இது பொருந்தும். 

Windows 7 , Vista பயனர்கள் Alt+Tab வேலையை Windows Key+Tab மூலம் செய்யலாம். இது முழு ஸ்க்ரீனில் திரைகளை காட்டும். இது அழகாக இருக்கும். 

Ctrl + Back space and Ctrl + Left or Right arrow

Ctrl + Back space ஆனது ஒரு முழு வார்த்தையை நீக்க பயன்படுகிறது. 

Ctrl + Left or Right arrow ஆனது ஒரு கோப்பில் ஒவ்வொரு எழுத்தாக நகராமல், வார்த்தையாக நகர்த்த பயன்படும். இதனுடன் சேர்த்து Shift Key அழுத்தினால் குறிப்பிட்ட வார்த்தையை தெரிவு செய்யலாம். 

Ctrl + S

குறிப்பிட்ட ஒரு கோப்பை சேமிக்க பயன்படுகிறது. 

Ctrl + Home or Ctrl + End

ஒரு கோப்பில் உங்கள் Mouse Cursor - ஐ கோப்பின் cursor இருக்கும் வரியின் ஆரம்பம் மற்றும் முடிவுக்கு செல்ல உதவுகிறது. 

Ctrl + P

பிரிண்ட் செய்யும் வசதிக்கு இது. 


Space Bar இணையத்தில் உலவும் போது ஒரு பக்கத்தில் இருக்கும் போது கீழே செல்ல உதவுகிறது, Shift+Space Bar மேலே செல்ல உதவுகிறது. 




Author : tipsdocs // 8:28 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.