Saturday, September 8, 2012

மார்க்கை கிரேடாக மாற்ற.


சதவிகித்திலிருந்து தகுதி குறியீட்டை உருவாக்குதல் (letter Grade)
     தற்பொழுது ஆசிரியர்கள் மதிப்பீட்டு முறையில்  CCE EVALUATION  Continuous and Comprehensive Evaluation  முறையை பின்பற்றி வருகிறார்கள்  அதில் மார்க்கை கிரேடாக மாற்ற Microsoft Excel -லை எவ்வாறு பயன் படுத்துவது என்று பார்ப்போம்.
முதலில் நான்கு வளரறி மதிப்பெண்களில் அதிக இரண்டு மதிப்பெண்களின் கூடுதலை காண கீழ்கண்ட Formula வை பயன் படுத்தலாம்.
           =SUM(LARGE(C13:F13,{1,2}))
     அடுத்து மதிப்பெண்ணை Grade ஆக மாற்ற Microsoft Excel-ஐ கீழ்கண்ட முறைகளை பின்பற்றி பயன்படுத்தலாம்.
சதவிகித்திலிருந்து தகுதி குறியீடாக மாற்ற விதிமுறைகளைச்( Formula) சேர்க்கலாம்.
முதலில் Worksheetல் ஒரு பகுதியில்கீழ்கண்டவகையில் Lookup Table-ஐ உருவாக்க வேண்டும்.




        Lookup table இரண்டு Columns –ஐக் கொண்டது முதல் Column மதிப்பெண்ணைக் குறிக்கும். இரண்டாவது Column அதனுடைய தொடர்புடைய Grade -ஐ குறிக்கும். இந்த rangeல் மிகவும் குறைந்த மதிப்பெண்ணில் தொடங்கி உச்ச மதிப்பெண் வரையில் முடியும்.

எந்த cell ல் கிரேட் வரவேண்டுமோ அந்த cell-ஐ கிளிக் செய்யவும்.
Edit formula –வை click செய்யவும்.
Name box Drop down list – இல் click செய்யவும். பிறகு Lookup ஐ தேர்ந்தெடுக்கவும்.
 
Lookup_value ல் கர்சரை வைத்து பிறகு கிரேடாக மாற்றவேண்டிய செல்லுக்கு சென்று click செய்யவும். இப்பொழுது அந்தசெல் Lookup_value ல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

Lookup-vector-ல் கர்சரை வைத்து பிறகு ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த lookup table –க்கு சென்று மார்க் இருக்கும் COLUMN முழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.

Result_vector –ல் கர்சரை வைத்து பிறகு ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த lookup table –க்கு சென்று கிரேட் இருக்கும் COLUMN முழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.
இப்பொழுது Formula bar –ஐ click செய்யவும் அதில் =LOOKUP(M13,T:T,U:U) என்று Formula தோன்றும். இந்த வரிசையில் Formula-ஐ இழுக்கவும். Column –இன் கடைசிவரை இழுத்தால் கொடுக்கப்பட்டுள்ள தகுதி குறியீடுகள் எல்லா cell-களிலும் தோன்றும்.

File Menu-வில் Save –Click செய்யவும்.  

 அன்பார்ந்த ஆசிரியர்களே  நீங்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் 50 மாணவர்களுக்கான மதிப்பீட்டு படிவத்தை தயாரித்து கீழ் கண்ட இணைப்பில் CCE_GRADE.rar  என்ற கோப்பை இணைத்துள்ளேன் அதை Download செய்து Extract செய்து  பயன்படுத்தி பாருங்கள்.
DOWNLOAD செய்ய CCE_GRADE ஐ CLICK செய்யவும்.




Author : tipsdocs // 6:50 AM

8 comments:

  1. Hai! Super Sir Thankyou Sir continue it sir



    A.Edwardselvaraj

    ReplyDelete
  2. Sir,

    How to down load all these lessons?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி ,
      முடிவில் உள்ள CCE_GRADE என்ற வார்த்தையை கிளிக் செய்து டவுன்லோட் செய்யலாம். இதை Rename செய்து ஐந்து பாடங்களுக்கும் பயன் படுத்தலாம்.

      Delete
  3. SIR,
    I can not down load this CCE_GRADE that;s why ?plz help me. thankyouvery much
    A.Edwardselvaraj

    ReplyDelete
    Replies

    1. சரி செய்யப்பட்டுவிட்டது முயற்சி செய்து பாருங்கள்
      நன்றி! நன்றி.

      Delete
  4. Very Nice Work done. keep it up.Thank you Sir.By MPL HSS,Kaveripakkam,Tindivanam

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  5. hi sir,
    i like to use cce grade sheet for the year 2013-14, but it asks for the password because it is a protected sheet. so kindly provide us password as soon as possible .
    thank you
    GANESH TEACHER
    VILLUPURAM BLOCK

    ReplyDelete

 
Powered by Blogger.