Thursday, June 7, 2018

செல்போனிலிருந்து மடிகணினி (Mobile to laptop projection)



அன்பார்ந்த ஆசிரியர்களே நம் புது பாடத்திட்டத்தில் 6,9,11 வகுப்பு புத்தகங்களில் உள்ள QR CODE களை நாம் DIKSHA APP  மூலமாக டவுன்லோட் செய்த பாடங்களை LCD PROJECTOR  மூலம் மாணவர்களுக்கு நடத்த நம் செல்போனை  LAPTOP / DESKTOP உடன் இணைப்பது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் நம் LAPTOP / DESKTOP ல் VYSOR என்ற மென்பொருளை Chrome Web Store ல் இருந்து கீழ்கண்ட இணைப்பின்மூலம் டவுன்லோடு செய்து . இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.


VYSOR  மென்பொருளை இன்ஸ்டால் செய்தபிறகு நம் செல்போனை USB கேபில் மூலம் இணைக்கவேண்டும்.
அவ்வாறு இணைக்கும் பொழுது  VYSOR ல்  No devices found Make sure Android USB Debugging is enabled என்று வரும்.


செல்போனில் சென்று SETTING ல்  Developer Option ல் சென்று USB Debugging செய்யவேண்டும்.  செல்போனில் SETTING ல்  Developer Option  தெரியவில்லை என்றால்  SETTING  கடைசியாக இருக்கும்  About Phone ல் சென்று  அதில் கடைசியாக இருக்கும் Build number  ரை ஏழுமுறை  தட்டவும் , இப்பொழுது BACK சென்று பார்த்தால்  Developer Option  வந்திருப்பதை பார்க்கலாம்.
 





அந்த  Developer Option  ல் சென்று  USB Debugging  என்பதை Enable செய்ய வேண்டும் அப்பொழுது வரும் Allow USB debugging?  என்பதை OK கொடுக்கவேண்டும்.



இப்பொழுது VYSOR ல் View என்பதை கிளிக் செய்து நம் செல்போனை   LAPTOP/DESKTOPல் காணலாம்.

Sound effect க்கு Headphone Pin லிருந்து Output  எடுத்து  Amplifier மூலம் speaker ல் இணைக்கவும்.


            பாடம் நடத்தி முடித்தவுடன் அவசியம்  USB Debugging  DISABLE செய்துவிடவும் , USB Debugging  என்பதை Enable லுடன் வேறு யாரிடமும் நம் செல்போனை தந்தால் நம் செல்போன்  DATA பாதுகாப்பாக இருக்காது.
 

 


Author : tipsdocs // 9:40 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.