Friday, December 28, 2012

எக்ஸல்லில் Freeze Panes





நாம் எக்ஸல்லில் பெரிய டாக்குமெண்ட் தயார்செய்யும்பொழுது முதல் Column மற்றும்  Row -ல் அடித்துவைத்திருக்கும் தலைப்புகள் குறிப்பிட்ட பகுதிக்கு பிறகு மறைந்து நமக்கு டேட்டா பதிவு செய்யும்பொழுது ஒவ்வொருமுறையும் தலைப்பை இழுத்து பார்க்கவேண்டியிருக்கும். இந்த பிரச்சனையிலிருந்து நம்மை காப்பாற்றும் TOOL தான் Freeze Panes Tools.
Freeze Panes Tools. பயன்படுத்தும் முறை.
முதல் Row Freeze செய்ய
View tab ஐ கிளிக் செய்யவும்
.
Freeze Panes ஐ கிளிக் செய்யவும்.

 

 

Freeze Top Row என்பதை கிளிக் செய்யவும்.

இப்பொழுது எக்ஸல்லை கீழ் பக்கமாக நகர்த்தும்பொழுது  முதல்  Top Row  மறையாமல் இருப்பதை பார்க்கலாம்.
முதல் Column Freeze செய்ய Freese First Column என்பதை கிளிக் செய்யவும்.

இப்பொழுது எக்ஸல்லை பக்கவாட்டில் நகர்த்தும்பொழுது  முதல் Column மறையாமல் இருப்பதை பார்க்கலாம்.
Row மற்றும் Column இரண்டும் Freeze ஆக இரண்டும் சந்திக்கும் cell லை தேர்ந்தெடுத்து. Freeze Panes என்பதை தேர்ந்தெடுக்கவும்.

   
இப்பொழுது எக்ஸல்லை கீழ் பக்கவாட்டில்  நகர்த்தும்பொழுது  முதல் Row மற்றும் முதல் Column மறையாமல் இருப்பதை பார்க்கலாம்.
Unfreeze செய்வதர்க்கு unfreeze panes என்பதை தேர்ந்தெடுக்கவும்.

     மேற்கண்டமுறையில் Excel-இல் எளிமையாக டேட்டாவை  பதிவு செய்யமுடியும்.




Author : tipsdocs // 8:40 PM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.