Thursday, August 23, 2012

TEAM VIEWER ஒரு பார்வை


நம் வீட்டில் இருந்தபடி பிறகணினியை இயக்க – TEAM VIEWER


 
        நம் வீட்டில் இருக்கும்  கணினியில் அமர்ந்து கொண்டே வெளி நாட்டில் இருக்கும் நம்  நண்பரின் கணினியை இயக்க  முடியும். ஆம் இதற்கு தேவையான மென்பொருள் Team Viewer ஆகும். 
    ஆம் Remote Control வசதியை  இலவசமாக வழங்கும் Team Viewer  மென்பொருள் பற்றி நாம் தெறிந்துகொள்ளவேண்டும்.     

        நம் வீட்டில் இருந்தபடியே நம் நண்பரின்  கணினியில் ஒரு மென்பொருளை இயக்கி அவருக்கு அந்த மென்பொருளில் சந்தேகங்களை நீக்கமுடியும். அவருடைய பிரச்சனைகளை நம் வீட்டில் இருந்தபடியே தீர்க்கமுடியும். ஆம் இதற்கு தேவை TEAM VIEWER மென்பொருள். 

       இந்த மென்பொருளை http://www.teamviewer.com என்ற இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

          பிறகு இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
       இன்ஸ்டால் செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்துகொள்ளவேண்டும். 

பயன்படுத்தும் முறை

      நாம் தொடர்புகொள்ள விரும்பும் நண்பரையும் மேற்கண்டமுறையில் இன்ஸ்டால் செய்துகொள்ளச் சொல்லவேண்டும்

      பிறகு இணைய இணைப்பில் இருக்கும்போது Team Viewer-ஐ ஓபன் செய்யுங்கள் கீழ்கண்ட படத்தில் உள்ளது போல நமக்கு என்று YOUR ID மற்றும்  Password  உருவாகியிருப்பதை பார்க்கலாம்.



     உங்களுடை ID & Password ஐ உங்கள் நண்பருக்கு போன்மூலமோ CHATTING மூலமோ  தெரிவித்து அவருடைய  ID மற்றும் Password ஐ தெறிந்துகொண்டு Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுத்து பிறகு வரும் பெட்டியில் Password ஐ கொடுத்து அவரது கம்ப்யூட்டரின் Desktop க்கு செல்லுங்கள்.

   
இதில் File Transfer என்பதை பயன்படுத்தி  File களை உங்கள் நண்பர் கம்ப்யூட்டரில் இருந்து  Transfer செய்ய உதவும்.  அவரது கம்ப்யூட்டருக்கும் File களை Transfer செய்யலாம்.
பயன்படுத்தி மகிழுங்கள்.

Author : tipsdocs // 7:31 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.