அன்பார்ந்த பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் கம்ப்யூட்டரை
பயனுள்ள   வகையிலும் ஆர்வத்துடனும் பயன்படுத்த
EXCEL ல் பாடத்தில் உள்ள ஒரு மதிப்பெண்வினாக்களை தயார் செய்து கம்ப்யூட்டரிலேயே பதில்
அளிக்கச்செய்து மதிப்பீடு செய்யலாம்.
 எக்ஸலில் ஒரு மதிப்பெண் வினா தயார்
செய்ய கீழ்கண்டவழிமுறைகளை பின்பற்றவும்.
1.           ஒரு எக்ஸல்லை
திறந்து கொள்ளவும்.
2.           அதில்
COLUMN A ல் வினாக்களை டைப் செய்யவும், (COLUMN WIDTH அதிகமாக்கி கொள்ளவும்)    அந்த செல்லிலேயே
வினாவுக்கு கீழ் தேர்ந்தெடுக்கவேண்டிய நான்கு பதில்களையும் டைப் செய்யவும், ஒரு செல்லிலேயே
ஒரு வரியிலிருந்து அடுத்தவரிக்கு செல்ல ALT
+ ENTER -ஐ அழுத்தவும்.
3.   COLUMN
B ல் பதில் டைப் செய்யவேண்டிய பகுதி ஆகையால் காலியாக விடவேண்டும்.
4.   COLUMN
C மதிப்பீடு செய்யும் பகுதி அதில் கீழ்கண்ட FORMULA டைப் செய்யவேண்டும்.
  =IF(B1="", "",
IF(B1="answer", "Right", "Wrong"))
தமிழாக
இருந்தால்
  =IF(B1="", "", IF(B1="பதில்", "சரி", "தவறு"))
இதில் answer (பதில்) என்ற வார்த்தையை எடுத்துவிட்டு
COLUMN A க்கு உரிய சரியான விடையை டைப் செய்யவும்.
5.   எடுத்துக்காட்டாக cell
A2
ல் ”இந்தியாவின் தலைநகரம் எது?” என்ற கேள்வி டைப் செய்துவிட்டு.  cell B2-வை காலியாக
விட்டு விட்டு cell C2 ல் கீழ்கண்ட FORMULA டைப் செய்யவேண்டும்.
=IF(B2="",
"", IF(B2="டில்லி", "சரி", "தவறு"))
6.   Cell D2 ல் மதிப்பெண் வருவற்கு கீழ்கண்ட
FORMULA டைப் செய்யவேண்டும்.
=IF(C2="சரி", 1, 0)
7.      பிள்ளைகளிடம் வினாவை கொடுக்கும்
பொழுது FORMULA BAR –ல் உள்ள பதிலை பார்க்காமல் இருக்க.
VIEW – க்கு சென்று அதில் இருக்கும் FORMULA என்ற பெட்டியில்
இருக்கும் டிக்கை எடுத்துவிட்டு Full Screen என்பதை
தேர்ந்தெடுத்து Save செய்துவிட்டு  பதில் டைப் செய்ய கொடுக்கவும்.
இத்துடன் உங்களுக்காக தயாரிக்கப்பட்ட பத்து கேள்விகளை உடைய Excel Quiz இணைத்துள்ளேன் டவுன்லோடு செய்து
பயன்படுத்தி பாருங்கள்.


0 comments:
Post a Comment