Saturday, December 8, 2012

ஜீமெயில் பாதுகாப்பு



நாம் பயன்படுத்தும் ஜீமெயில் அக்கவுண்ட்டை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சிறந்த கடவுச்சொல்லை பயன்படுத்தினால் மட்டும் போதாது. அதற்கு இரண்டடுக்கு பாதுகாப்பும் தரும் வசதியை ஜீமெயில் நமக்கு வழங்கியுள்ளது.
இரண்டடுக்கு பாதுகாப்பை நாம் எப்படி பயன்படுத்துவது என்பதை இப்பொழுது பார்ப்போம்.
நாம் முதலில் நம் ஜீமெயில் அக்கவுண்ட்டை திறந்து அதில் கீழ்கண்டவாறு அக்கவுண்ட்பகுதிக்கு செல்லவும்.


பிறகு அதில் SECURITY என்பதை கிளிக் செய்யவும். 



அதில் 2 STEP VERIFICATION என்பதில் Settings என்பதை கிளிக் செய்யவும்


அதில் StartSetup என்பதை கிளிக் செய்து உள்ளே செல்லவும்
 


அதில் Which Phone should we send codes to? என்பதில் உங்களுடைய செல்போனின் எண்ணை சரியாக டைப் செய்யவும். உங்களுக்கு SMS மூலம் CODE கிடைக்க Text Message(SMS) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
பிறகு கிழே இருக்கும் send code என்பதை அழுத்தினால் உங்கள் போனுக்கு GOOGLE ல் இருந்து 6 இலக்க எண்ணில் ஒரு கோட் வரும்.



அந்த கோடை குறிப்பிட்ட கட்டத்தில் கொடுத்து confirm செய்யவும்.

இனி நீங்கள் உங்கள் மெயிலுக்கு செல்லும்போது கடவுச்சொல்லை கொடுத்தவுடன் உங்கள் செல்பேசிக்கு Google ல் இருந்து 6 இலகக்கத்தில்
ஒரு கோட் வரும் அதை கீழ்கண்டவாறு டைப் செய்து உள்ளே செல்லலாம்.
சில நேரங்களில் SMS வேலைசெய்யவில்லை என்றால் 
call your phone ending in --- என்பதை கிளிக் செய்தால் நமக்கு voice call மூலம் code கிடைக்கும்.
 


இந்தமுறையினால் நம் ஜீமெயிலை யாராலும் ஹேக் செய்யமுடியாது.
நமக்கு வரும் செல்போன் கோடை பயன்படுத்தினால் மட்டுமே ஜீமெயில் அக்கவுண்ட்டில் உள்ளே செல்லமுடியும்.
 
 

Author : tipsdocs // 11:47 PM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.