Sunday, February 17, 2013

மின்னஞ்சல் படிக்கப்பட்டதா?


அனுப்பிய ஈ-மெயில் ஓப்பன் செய்யப்பட்டதா?



        நாம் அனுப்பு ஈ-மெயிலானது பார்க்கப்பட்டதா, இல்லையா என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியுமா?, ஈ-மெயிலானது செல்லவில்லையெனில் மட்டுமே செய்திவரும் மற்றபடி நாம் அனுப்பிய ஈ-மெயில் திறக்கப்பட்டதா இல்லையா என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியுமா?, இதை அறிந்து கொள்ள அருமையான Right Inbox  நீட்சி உள்ளது, ஆனால் இந்த நீட்சியானது ஜி-மெயிலுக்கு மட்டுமே பொருந்தும்.

நீட்சியை பதிவிறக்க  சுட்டி

              இந்த  Right Inbox  தளத்திற்கு சென்று "Install Now" என்பதை  கிளிக் செய்து  இந்த நீட்சியினை நிறுவிக்கொண்டு ஒரு முறை உங்கள் Browser-  close செய்து ஓபன் செய்யுங்கள்.  அல்லது  ஜிமெயிலை Refresh  செய்யுங்கள்.
இந்த நீட்சியானது  மொசில்லா பயர்பாக்ஸ்  சபாரி, கூகுள் குரோம் போன்ற உலவிகளில் செயல்படக்கூடியது,  
பின் உங்களுடைய ஜிமெயில் முகவரியை ஒப்பன் செய்த உடன்  உங்கள் ஜிமெயிலில் "Right Inbox is Ready" என்று வருவதை Continue கொடுங்கள்.



அடுத்த பக்கத்தின் Grand Access என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
 


 பின் நீங்கள் கம்போஸ் மெயில் சென்றவுடன் Track என்பதற்கு நேராக உள்ள செக்பாக்சில் டிக் செய்து ஈ-மெயிலை அனுப்ப வேண்டும். 


குறிப்பிட்ட ஈமெயில் ஓபன் செய்யப்பட்ட உடன் கீழே உள்ளது போல ஒரு மின்னஞ்சல் உங்களுக்கு வரும்.
 


இந்த சேவையின் மூலம் மாதத்திற்கு 10 ஈ-மெயில்களை மட்டுமே Track செய்ய முடியும். அதற்கு மேல் Track செய்ய வேண்டுமெனில் கட்டண சேவையின் மூலமாகவே Track செய்ய முடியும்.

        இனி நாம் அனுப்பிய ஈ-மெயில் எப்போது ஒப்பன் செய்யப்பட்டதா இல்லையா என்பதை நம்மால் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

 




 


 

Author : tipsdocs // 5:32 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.