Saturday, July 14, 2018

செல்போனிலிருந்து கணினி


                
         
               அன்பார்ந்த ஆசிரியர்களே நம் புது பாடத்திட்டத்தில் 6,9,11 வகுப்பு புத்தகங்களில் உள்ள QR CODE களை நாம் DIKSHA APP  மூலமாக டவுன்லோட் செய்த பாடங்களை LCD PROJECTOR  மூலம் மாணவர்களுக்கு  நடத்த நம் செல்போனை  LAPTOP / DESKTOP உடன் இணைப்பது எப்படி என்று VOISOR APP பற்றி பார்த்தோம்..
இப்பொழுது அதைவிட எளிமையான  AIRMORE APP பற்றி பார்ப்போம்.

முதலில் நம் MOBILE ல் AIRMORE என்ற மென்பொருளை GOOGLE PLAY Store ல் இருந்து  டவுன்லோடு செய்து . இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.
அதன்பிறகு AIRMORE APP Open செய்தவுடன்  start என்பதை சொடிக்கினால்
கீழ்கண்டவாறு திரை வரும். திரையில் Hotspot settings என்பதை கிளிக் செய்து HOTSPOT ENABLE செய்யவும்.
  


பிறகு கீழ்கண்டவாறு திரை வரும்.
 உங்கள் laptop ல் wifi setting ல் AirMoreAP என்ற இணைப்பை உங்களுக்கு  மொபைலில் வந்த password உடன் இணைக்கவும்

இப்பொழுது நம் LAPTOP ல் நம் மொபைல் wifi யுடன் இணைத்துவிட்டு,. குரோம் பிரவுசரை திறந்து  அதில் அட்ரெஸ் பாரில்     http://192.168.43.1:2333/    என்பதை டைப் செய்து எண்டர் தட்டினால் கீழ்கண்டவாறு திரை தோன்றும்.

அப்பொழுது நம் மொபைலில் தோன்றும் REQUESTING TO CONNECT என்பதை  Accept என்பதை சொடுக்கினால் 
நம் மொபைல் LAPTOP டன் இணைக்கப்பட்டு கீழ்கண்டாவாறு நமது LAPTOP ல் தோன்றும். அதில் REFLECTOR என்பதை கிளிக் செய்தால் நம் மொபைல்  LAPTOP ல் தெரிவதை பார்க்கலாம்.



இப்பொழுது நாம் நம் மொபைலில் செய்யும் செயல் அனைத்தையும் LAPTOP ல் பார்க்கலாம். 


இந்தமுறையில் நம் DIKSHA APP யை பயன் படுத்தி மாணவர்களுக்கு LAPTOP ல் காட்டலாம்.

Sound effect க்கு Headphone Pin லிருந்து Output  எடுத்து  Amplifier மூலம் speaker ல் இணைக்கவும்.                


Author : tipsdocs // 9:47 AM

1 comments:

 
Powered by Blogger.