Saturday, January 28, 2023

வருமானவரி கணக்கீடு-2022 - 2023



        
             

இந்த வருடம் 2022-2023 வருமானவரி கணக்கீட்டில்  நாம் இரண்டு வகையான கணக்கீட்டில் எதை பயன்படுத்தினால் நமக்கு இலாபம் என்பதை ஒப்பிட்டு பார்க்க கீழ் கண்ட எக்ஸலில் FORM4 ல் தேவையான இடங்களில் பூர்த்திசெய்தால்  Form 12 ல் தானாக கணக்கீடு ஆகும். மேலும் Form 12 ல் உங்களுக்கு தேவையான இடத்தை பூர்த்தி செய்து முழுமையாக கணக்கீடு செய்து பழைய முறை கணக்கீடும். பிறகு OPTIONAL(NEW) ல் புதிய கணக்கீடும் உருவாகும் இவ்விரண்டையும் ஒப்பிட்டு தங்களுக்கு இலாபமான கணக்கீட்டை தேர்ந்தெடுத்துகொள்ளலாம்.

பழைய முறையில் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்த ஐம்பதாயிரம் வரை வருமான வரி கிடையாது. மேலும் இந்த ஆண்டு STANDARD DEDUCTION 50000 ஆண்டு வருமானத்தில் கழித்துக்கொள்ளலாம். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்த ஐம்பதாயிரம் முதல் ரூ 5 லட்சம் வரை பெறுபவர்கள் வருமானத்தில் 5 சதவீதத்தை வரியாக செலுத்தவேண்டும்.                                                                   
                   ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பெறுபவர்கள் வருமானத்தில் 20 சதவீதத்தை வரியாக செலுத்தவேண்டும். ரூ.10 லட்சத்துக்கு மேல் பெறுபவர்கள் வருமானத்தில் 30 சதவீதத்தை வரியாக செலுத்தவேண்டும்.

         Rebate under Section 87A : NET TAXABLE INCOME ரூ.5,00,000 க்கு குறைவாக உள்ளவர்களுக்கு வருமானவரியில் ரூ 12,500 Rebate வழங்கப்பட்டுள்ளது. இந்த Rebate தானாக கணக்கிடும்படி Form12  அமைக்கப்பட்டுள்ளது.
        
               நீங்கள் உங்கள் வருமானவரியை கணக்கீடு செய்ய  ஒரு EXCEL SHEET  கீழே இணைத்துள்ளேன். அதில் முதலில் Form 4 ல் தேவையான இடங்களில் பூர்த்திசெய்தால்  Form 12 ல் தானாக கணக்கீடு ஆகும். மேலும் Form 12 ல் உங்களுக்கு தேவையான இடத்தை பூர்த்தி செய்து முழுமையாக கணக்கீடு செய்து பிரிண்ட் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
       குறிப்பு : வருமானவரியை கணக்கீடு செய்யும்பொழுது  HOUSING LOAN  INTEREST வருமானத்திலிருந்து கழிக்க விரும்பினால் நாம் வாங்கும் 12 மாத HRA வை வருமானத்திலிருந்து கழிக்கக்கூடாது. ஆகையால் HOUSING LOAN INTEREST கழிக்க விரும்பினால்  INTEREST மட்டுமே கணக்கீடு செய்யும்படி Form 12 அமைக்கப்பட்டுள்ளது.







              

Author : tipsdocs // 10:45 PM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.