Tuesday, March 3, 2020

ரூபிக்ஸ் கியூப்











உலகில் 12 சதவீத மக்களால் மட்டும் தீர்க்க முடிந்த புதிர் விளையாட்டு ரூபிக்ஸ் கியூப் ஆகும். இதை ஹங்கேரிய நாட்டு பேராசிரியர் எர்னோ ரூபிக்ஸ் என்பவர் வடிவமைத்தார். இந்த புதிரை தீர்ப்பதர்க்கு ஆயிரக்கணக்கான முறைகள் உள்ளன.
இந்த புதிரினை எப்படி அடிப்படை முறையில் தீர்ப்பது என காண்போம்

இதற்கு ஆறு face உண்டு.
   Right face ,    Left face, Front face.    Back face,    Upper face,     Down face

திருப்பும்முறைக் குறியீடுகள்
         F  = Front கடிகாரம் சுற்றும் முறை
         F’ = Front எதிர் கடிகாரம் சுற்றும் முறை
         B  = Back கடிகாரம் சுற்றும் முறை
         B’ = Back எதிர் கடிகாரம் சுற்றும் முறை
        U  = Upper கடிகாரம் சுற்றும் முறை
         U’ = Upper எதிர் கடிகாரம் சுற்றும் முறை
        R  = Right கடிகாரம் சுற்றும் முறை
        R’ = Right எதிர் கடிகாரம் சுற்றும் முறை
         L  = Left கடிகாரம் சுற்றும் முறை
         L’ = Left எதிர் கடிகாரம் சுற்றும் முறை
D = DOWN கடிகாரம் சுற்றும் முறை
   D' = DOWN எதிர் கடிகாரம் சுற்றும் முறை

க்யூபின் அமைப்பை தெரிந்துகொள்ளுவோம்.









Center piece
ஒவ்வொரு பக்கத்திலும் நடுவில்  center piece இருக்கும்.  இது மொத்தம்
ஆறு இருக்கும்.
Edgepiece  : இது இரண்டு வர்ணம் கொண்டதாக மொத்தம் 12 இருக்கும்.
Corner piece
மூன்றுவர்ணம் கொண்டிருக்கும்மொத்தம் எட்டு கனசதுரங்கள் இருக்கும்.



வழிமுறை 
வெள்ளையை  நடு கனசதுரத்தை மேல் முகமாக வைத்துக் கொள்ளவும்வெள்ளை கூட்டல் குறி 
ஒன்றை படத்தில் காணுமாறுஅமைக்கவும்.
கூட்டல் அமைக்கும்பொழுது Edgepiece இரண்டாவது வண்ணம் அடுத்தபக்கத்தின் Center piece  ஒத்துப்போகவேண்டும். பல முறை சுழற்றி பார்ப்பதன்மூலம் பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும்.

 வழிமுறை 
அடுத்து  Corner piece ஐ    சரியான கார்னரில் கீழ்பகுதியில் கொண்டுவரவும். சரியான கார்னர் என்பது அதன் மூன்று வண்ணத்தை பொருத்தது. எடுத்துக்காட்டாக ஆரஞ்சு,பச்சை,வெள்ளை கார்னர் பீஸ் பச்சை மற்றும் ஆரஞ்சு செண்டர் பீஸுக்கு இடையில் அமையுமாறு கொண்டுவந்தாலே போதும்.

Corner pieceல் ல் வெள்ளைப்பகுதி நம் பக்கம் இருக்கும்படி அமைத்துக்கொண்டு கீழ்கண்ட திருப்புதலை செய்யவேண்டும்.





அடுத்து வெள்ளை இருக்கும் இடத்தை பொருத்து கீழ்கண்ட திருப்பங்களை செய்யவும்
WHITE AT RIGHT FRONT  D  R’  D’ R   
WHITE AT LEFT FRONT   D L D’ L’


இப்பொழுது அனைத்து பக்கமும் T வடிவத்தில் கலர் சேர்ந்திருப்பதை பார்க்கலாம்
அடுத்து வெள்ளைப்பகுதியா மேல் பக்கமாக வைத்துகொண்டு கீழ்பகுதியின் எட்ஜ் பீஸ் செண்ட்ர் பீஸ் கலர் பொருந்தும்படி வைத்து எட்ஜ்பீஸின் அடிபக்க கலர் வலதுபக்கம் இருந்தால்  D R’ D’ R என்று செய்து அடுத்து கலைந்த வெண்மையை நம் எதிர்பக்கம்  வைத்துக்கொண்டு D’ L D L’  என்று வெண்மையை பழைய இடத்திற்கு எடுத்து செல்லவும்.
எட்ஜ்பீஸின் அடிபக்க கலர் இடதுபக்கம் இருந்தால்  D’ L’ D L’ என்று செய்து அடுத்து கலைந்த வெண்மையை நம் எதிர்பக்கம்  வைத்துக்கொண்டு D R’ D’ R  என்று வெண்மையை பழைய இடத்திற்கு எடுத்து செல்லவும்.
இதை திரும்ப திரும்ப செய்யும் பொழுது இரண்டு பகுதி கலர் சேர்ந்திருப்பதை பார்க்கலாம்.
  




அடுத்ததாக நாம் மஞ்சள் நிறத்தில் கூட்டல் குறி ஒன்றை மேல்புறத்தில் அமைக்க வேண்டும்.
மஞ்சள் பகுதியை மேல்புரமாக வைத்துக்கொண்டு கீழ்கண்ட திருப்பங்களை செய்யவும்.
F R U R’ U’ F’
இதை செய்யும்பொழுது மஞ்சல் கீழ்கண்டவாறு L தலைகீழாக  அமைப்பில் வைத்துக்கொண்டு செய்து அடுத்து மஞ்சள் கிடைநிலையில் இருக்கும்படி திரும்ப திரும்ப F R U R’ U’ F’ என்பதை செய்தால் மஞ்சளில் கூட்டல் அமையும்.
 





அடுத்து மஞ்சளில் சரியான  EDJE PIECE அமைக்க கீழ்கண்ட திருப்பங்களை செய்யவும்.
R 2U R’ U’ R U’ R’ U’
அடுத்து மஞ்சளில் சரியான கார்னர் பீஸ் அமைய கீழ்கண்ட திருப்பங்களை செய்யவும்.
L’ U R U’ L U R’ U’
சரியான கார்னர் பீஸ் வந்தவுடன் அடுத்தடுத்து இரண்டு திருப்பங்களை திரும்ப திரும்ப செய்வதன்மூலம் நாம் புதிரை முடிக்கலாம்.
R 2U R’ U’ R U’ R’
L’ 2U L U L’ U L
செய்யும்பொழுது சேர்ந்த பக்கங்களை இடது பக்கமாக வைத்து செய்யவேண்டும். தொடர்ச்சியாக செய்யும்பொழுது உங்களுக்கு நிச்சயம் தீர்வுகிடைக்கும். நன்றி!






Author : tipsdocs // 6:28 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.