விடுமுறை காலங்களில் நம்
மாணவர்களுக்கு வீட்டிலிருந்தபடியே பாடங்களை நடத்த உதவும் செயலிகளில்
முதன்மையானது இந்த Google
Class Room செயலி.
கூகுள் வகுப்பறையானது நாம் ஒரு பாடத்தை யூடியூப் மூலமாக நடத்தி அதனை நாம் பதிவேற்றம் செய்து அப்படி நடத்திய வீடியோவை Google Classroom இல் மாணவர்களுக்கு பகிரலாம். மேலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்களை (assignment)வழங்கி அதை திருத்தி மாணவர்களுக்கு வழங்கிட
முடியும். ஒரு ஆன்லைன் தேர்வு நடத்தி அவர்களுக்கு அதை திருத்தி கொடுக்கலாம்.
இதற்கு நமக்கும்
மற்றும் மாணவர்களுக்கும் கூகுள் மின்னஞ்சல் இருக்கவேண்டும்.
உங்கள்
ஜீமெயிலுக்கு செல்லவும்.
வலது மேற்புறத்தில் இருக்கும் + பட்டனை அழுத்தினால் உங்களுக்கு இரண்டு ஆப்சன்கள் தோன்றும்
>> Join Class
>> Create Class
Join Class – மாணவர்கள்
கிளிக் செய்து ஆசிரியர் அனுப்பிய Code ஐ உள்ளீடு செய்து வகுப்பில் இணையலாம் .
நாம் Create
Class ஆப்சனை கிளிக் செய்து
விதிமுறைகளை படித்து அந்த ஆப்சனை டிக் செய்து continue
கொடுக்கவேண்டும்.
இப்போது பின்வரும் படத்தில் இருக்கின்ற ஆப்சன்கள் பூர்த்தி செய்யவேண்டும்,
இப்பொழுது உங்களுக்கான வகுப்பறை தயார்.
அடுத்து மாணவர்களை சேர்க்க வேண்டும். இதற்கு அவர்களுடைய மின்னஞ்சல் முகவரியை people க்கு அருகே இருக்கும் பட்டனை அழுத்தி அதில் கொடுத்து சேர்க்கலாம். அல்லது அங்கு காட்டப்படும் Code ஐ மாணவர்களுக்கு
அனுப்பி வகுப்பில் சேர்ந்துகொள்ள முடியும்.
Class Work என்ற பகுதிக்கு
சென்று அங்கே நாம்
மாணவர்களுக்கு பாடத்தை யூடியூப் மூலமாக நடத்தி
அதனை நாம் பதிவேற்றம் செய்யமுடியும்,
Assignment
கொடுக்க முடியும், ஆன்லைன் தேர்வுகளை நடத்த முடியும்.
Very useful info for students and teachers at the current pandemic situation...
ReplyDeleteSuper sir.
ReplyDelete