Saturday, April 26, 2025

"கூட்டு விளைவு" – வெற்றிக்கான வழிகள்!

டேரன் ஹார்டி (Darren Hardy) என்பது அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் வெற்றி நெறியாளர். அவர் வெற்றியை விரும்பும் நபர்களுக்கான தெளிவான வழிகாட்டியாக உள்ளார். அவர் எழுதிய "The Compound Effect" புத்தகம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நபர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது.

டேரன் ஹார்டி பற்றி சில முக்கிய தகவல்கள்:

  • பிறப்பு: 1971, அமெரிக்கா
  • தொழில்: எழுத்தாளர், பேச்சாளர், முன்னாள் SUCCESS magazine பிரதிப் பதிப்பாளர்
  • பிரபல நூல்கள்:
    • The Compound Effect (2010)
    • The Entrepreneur Roller Coaster
  • முக்கிய கருத்து: சிறிய, தொடர்ச்சியான முயற்சிகள் வாழ்க்கையில் பெரிய வெற்றியை அளிக்கும் (Compound Effect)
  • The Compound Effect புத்தகத்தின் மூலமாக, டேரன் ஹார்டி கூறும் முக்கியமான செய்தி என்னவென்றால் — “நீங்கள் நாள்தோறும் எடுக்கும் சிறிய மற்றும் நிலைத்த முடிவுகள் தான், உங்கள் வாழ்க்கையின் முடிவுகளை தீர்மானிக்கின்றன.”

 புத்தகம்: "கூட்டு விளைவு" – வெற்றிக்கான வெகு சிறிய வழிகள்!

நம் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் தேவைப்படுகிறதா? அப்படியென்றால், பெரிய முயற்சிகள் இல்லாமலேயே அதனை அடைய முடியுமா? இத்தகைய கேள்விகளுக்கான பதில், டேரன் ஹார்டியின் புகழ்பெற்ற  "The Compound Effect" என்ற  புத்தகம்.

புத்தகத்தின் முக்கிய கரு: இந்த புத்தகம் சொல்வது மிகவும் எளிதான ஒரு உண்மை — “நாம் தினமும் செய்யும் சிறிய சிறிய செயல்கள் தான், நம்மை வெற்றி அல்லது தோல்விக்குக் கொண்டு செல்கின்றன.” தினசரி ஒழுக்கமான பழக்கங்கள், திட்டமிடல், தவறுகளை சரிசெய்தல் போன்றவை ஒரு நீண்ட காலத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது இப்புத்தகத்தின் அடிப்படை கருத்தாகும்.

புத்தகத்தின் சிறப்பம்சங்கள்:

  • உங்கள் பழக்கங்களை அடையாளம் காணும் வழிகாட்டி.
  • சுய ஒழுக்கம் மற்றும் நேர மேலாண்மையின் முக்கியத்துவம்.
  • வெற்றியாளர்கள் அனுசரிக்கும் நடைமுறைகள்.
  • உங்கள் வருமானத்தையும், வாழ்க்கையையும் மேம்படுத்தும் செயல்முறை வழிகள்.

யாருக்கு இந்த புத்தகம் தேவை?

  • தன்னை மேம்படுத்த விரும்பும் மாணவர்கள்.
  • தனது வாழ்க்கையை திட்டமிட நினைக்கும் இளைஞர்கள்.
  • தொழிலில் வெற்றியை நாடும் தொழில்முனைவோர்.
  • தன்னம்பிக்கையுடன் வாழ விரும்பும் யாரும்.

எனது கருத்து:கூட்டு விளைவு” என்பது வெற்றியின் ஒரு மந்திரக் கதையைப் போல,  ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறு நடவடிக்கையின் தாக்கத்தை உணர்த்தும் நடைமுறைக் கையேடு. இந்தக் கருத்து புரிந்தவுடன், உங்கள் பழக்கங்கள், நடவடிக்கைகள் எல்லாம் புதிய உந்துசக்தியுடன் செயல்படத் தொடங்கும்.

இந்த புத்தகத்தில் எனக்குப் பிடித்த சில வரிகள்.

நாம் உணர்கின்ற, சிந்திக்கின்ற, செயல்படுகின்ற, மற்றும் சாதிக்கின்ற விஷயங்களில் 95 சதவீதம் நாம் கற்றுக் கொண்டுள்ள பழக்கங்களினால் உருவாகின்றவைதான் என்று உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நீங்கள் எதைத் திட்டவட்டமாக உங்கள் மனத்தில் கற்பனை செய்து, ஆழமாக விரும்பி, தீவிரமாக நம்பி, உற்சாகத்துடன் செயல்படுத்துகிறீர்களோ, அது கண்டிப்பாக உங்கள் வாழ்வில் தோன்றியே தீரும்.”

நீங்கள் விரும்புகின்ற பொருள் எப்போதுமே உங்களுக்கு அருகிலேயே இருந்திருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்றாலும், நீங்கள் அதை விரும்புகின்றவரை உங்கள் மனத்தால் அதைப் பார்க்க முடியாமல் இருந்திருக்கிறது.

நாம் தூங்கச் செல்வதற்கு முன்பாக எதை அசைபோட்டுக் கொண்டிருக்கிறோமோ, அதை நமது ஆழ்மனம் ஆழ்ந்து ஆராய்ந்து அதை நிஜமாக்க முயலும் என்பதால் கண்ணயர்வதற்கு முன்பு என்னுடைய இலக்குகளையும் குறிக்கோள்களையும் பற்றி நான் எண்ணிக் கொண்டிருப்பேன் அவ்வளவுதான்.

நீங்களும் வாசித்து இதை முயற்சி செய்யுங்கள்! உங்கள் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு மாற்றத்திற்கும் இதுபோன்ற ஒரு "கூட்டு விளைவு"தான் காரணமாக இருக்கும்.

Author : MGG // 9:30 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.