
நாம் வேர்டில்
ஒரு டாக்குமெண்ட் தயாரிக்கும்பொழுது கணக்கீடுடன் கூடிய டேபில் எக்ஸல் மாதிரி இருந்தால்
நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு.
இந்தகுறையை போக்க
ஒரு வழி உண்டு. நாம் எக்ஸல் ஷீட்டை நம் வேர்ட் டாக்குமெண்ட்டில் சேர்த்து பயன்படுத்த
முடியும்.
மைக்ரோசாஃப்ட் 2007 ல் வேர்டில் எக்ஸல் சேர்க்கும் முறையை பார்ப்போம்.
முதலில் ஒரு வேர்டு
டாக்குமெண்ட்டை திறந்து மெனுபாரில் கடைசியாக ஒரு இடத்தில் வைத்து வலது கிளிக் செய்யவும்.
இப்பொழுது தோன்றும் விண்டோவில் Customize Quick Access Toolbar… என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

இப்பொழுது ஒரு
விண்டோ திறக்கும். அதில் உள்ள மெனு டேப்பில் Insert Tab என்பதை தேர்வு செய்தால் அதன் கீழ் கிடைக்கும்
ஆப்சனில் Excel
Spreadsheet என்பதை கிளிக் செய்து Add செய்து OK கொடுத்து வெளியேரவும்.

இப்போது உங்கள்
மெனுபாரில் Insert Microsoft Excel Worksheet என்ற
புதியதாக ஒரு எக்சல் ஐகான் உருவாகியிருப்பதை பார்க்கலாம்.

இந்த ஐக்கானை கிளிக்
செய்வதன்மூலம் எக்சல் ஷீட்டை வேர்டில் இணைத்து பயன் படுத்தலாம்.

வேர்டையும் எக்ஸல்லையும் ஒரே ஃபைலில் பயன்படுத்தி மகிழுங்கள்
thanks for the wonderful tips, you have given to us-Sri.V.M.Parthasarathy Advocate.
ReplyDeleteThanks for your Visit.
Deleteok thanks
Delete