நாம் எம் எஸ்
வேர்டில் ஒரு டாக்குமெண்ட் தயார் செய்யும்பொழுது படங்களை insert செய்யும் பொழுது வழக்கமாக ஒரு
பத்தியின் ஆரம்பத்தில் அல்லது பத்திகளுக்கு இடையில் சேர்ப்போம். ஆனால்
இணையதளத்தில் வருவது போல் நாம் விரும்பிய இடத்தில் படத்தை சேர்க்க கீழ்கண்ட
வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.
எடுத்துக்காட்டாக
கீழ்கண்ட டாக்குமெண்ட்டில் சிகப்பு வட்டம் இருக்கும் இடத்தில் நாம் படத்தை சேர்க்க
விரும்பினால் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

முதலில்
டாக்குமெண்ட் டைப் செய்த பிறகு ஒரு டெக்ஸ்ட் பாக்ஸ் இன்செர்ட் செய்யவேண்டும்.
Insert - Text
Box
நீங்கள் விரும்பும் இடத்தில் Text Box-ஐ நகர்த்திக்கொள்ளலாம்.
பிறகு Text Box –ல் ரைட் கிளிக் செய்து Format Text Box என்பதை செலக்ட் செய்யவேண்டும், அதில் Colors and Lines என்ற டேப்பில் color என்ற ஆப்ஷனில் No Color என்று மாற்றவேண்டும்.
பிறகு Layout என்ற
டேப்பில் Square என்பதை தேர்தெடுத்தவுடன், டாக்குமெண்ட் சரிசெய்யப்பட்டுருப்பதை
பார்க்கலாம்.
பிறகு நமக்கு வேண்டிய படத்தை இந்த Text Box–ல் பேஸ்ட் செய்து படதிற்கு தகுந்த மாதிரி Text Box-ஐ சரி செய்யலாம்.
இப்பொழுது கீழ்கண்ட
வகையில் படம் சேர்க்கப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

மேற்கண்டவகையில் நாம் விரும்பிய இடங்களில் படங்களை சேர்த்து எம்.எஸ்.வேர்ட் டாக்குமெண்ட்டை அழகாக உருவாக்கலாம்.
நன்றி.
0 comments:
Post a Comment