Saturday, May 29, 2021

குறைந்த விலையில் கணினி (RASPBERRY PI)




ராஸ்பெர்ரி பை என்பது ஒரு சிறிய கையடக்கக் கணினி, இந்த கணினியை வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியில் இணைத்து எளிதாக பயன்படுத்தலாம். இது முக்கியமாக மாணவர்கள் எளிதாக
கணினி அறிவியலில் பயிற்சி பெற மற்றும் செயல்திட்டம் செய்ய லண்டனில் ஒரு கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்டது.  விலையும் மலிவாக இருப்பதால் வாங்கி உபயோகிப்பதற்கு எளிதாக இருக்கிறது (3500 ரூபாய்), நாம் சாதாரண கணினிகளில் செய்யக் கூடிய அனைத்து வேலைகளையும் இதிலும் செய்ய முடியும். மேலும்  இதனை உபயோகித்து  (புரோக்ராமிங் செய்து) IOT செயல்திட்டங்களையும் , ROBOTICS செயல்திட்டங்களையும் செய்யமுடியும். 


ராஸ்பெர்ரி பையில் இயங்குதளம் நிறுவுதல்.
தேவையான பொருட்கள்: ராஸ்பெர்ரிபை 3 B+,  மின்னேற்றி (charger),  16GB நினைவக அட்டை (micro memory Card), Memory card adapter,

1.  ராஸ்பெர்ரி பையின் கீழ்கண்ட இணையதளத்துக்குச் செல்லவேண்டும்.


2.  பதிவிறக்கம் பக்கத்துக்குச் சென்று NOOBS இயங்குதளத்தைத்  தேர்ந்தெடுக்கவும்

3.   with desktop உள்ள இயங்குதளத்துக்கான zip file பதிவிறக்கவும்.

4.  இந்த zip file விரிப்பதற்கு 7-ஜிப் (7-Zip) மென்பொருள்  பயன்படுத்தவும்.

5.  பதிவிறக்கம் செய்யப்பட்ட NOOBS இயங்குதளத்தை நினைவகத்தில் எழுதுவதற்கு முன் micro memory Card யை sd card format software மூலம் format செய்யவேண்டும்.




6.  Format செய்த பிறகு UNZIP செய்த NOOBS மென்பொருளை  எழுதவும் (past செய்யவும்).

7.  ராஸ்பெர்ரி பையில் நினைவகத்தைச் செருகவும் விசைப்பலகை, சுட்டி, கணினித் திரை அல்லது தொலைக்காட்சி திரை ஆகியவற்றை இணைத்துக் கொள்ளவும். இப்பொழுது மின்னேற்றியை (charger) இணைத்தால் ஒரு பச்சை காட்டி விளக்கு விட்டுவிட்டு எரியத் தொடங்கும். இது இயங்கு தளம் ஏற்றலைக் குறிக்கிறது.

8.  சிறிது நேரத்தில்   restart ஆகி Desktop தோன்றும்.  இனி நீங்கள் சாதாரண கணினியைப்போல பயன்படுத்தி மகிழுங்கள்.

Author : tipsdocs // 12:09 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.