ஜிமெயில் இன்பாக்ஸில் 100க்கும் மேற்பட்ட அதாவது
10,000 க்கும் மேற்ப்பட்ட மெயில்களை ஒரே நேரத்தில்
தேர்வு செய்து, டெலிட் செய்ய முடியும்! அதெப்படி என்பதை பார்ப்போம்.
உங்கள் அக்கவுண்டில் இருக்கும் ஜிமெயிலை திறக்கவும்.
ஜிமெயிலின் மேல் பக்கத்தில் உள்ள Search bar-ல் is:unread என்று டைப் செய்து தேடவும்.
அதில் Any time என்பதில் நமக்கு தேவையான older than a week , older than a month, older than a year என்பதை தேர்வு செய்யவும்.
இப்போது இடது புறமாக தெரியும் சதுர வடிவிலான பெட்டியை கிளிக் செய்யவும்.
அதில் All என்பதை கிளிக் செய்யவும். இப்போது குறிப்பிட்ட பக்கத்தில் உள்ள
இமெயில்கள் 50 அல்லது 100 மட்டுமே தேர்வு ஆகி இருப்பதை
நீங்கள் காண்பீர்கள்.
இப்போது இமெயில்களுக்கு மேலே காட்சிப்படும் "select all conversations that match this
search." என்பதை கிளிக்
செய்யவும்.
பின்னர் அனைத்தையும்
டெலிட் செய்ய Trash icon-ஐ கிளிக் செய்யவும்.
இப்பொழுது காட்சிப்படும் confirm bulk action என்பதில் OK கிளிக் செய்யவும்.
இப்போது உங்களின் மின்னஞ்சல்கள் அனைத்தும் நீக்கப்படும். ஜிமெயில் அவற்றை KEPT FOR 30 DAYS-க்கு அனுப்பி 30 நாட்களுக்கு பிறகு அதை நிரந்தரமாக நீக்கிவிடும்.
0 comments:
Post a Comment