தினமும் காலையில்
நடைபயிற்சி செய்வது பல ஆரோக்கிய நன்மைகளை தரும். காலை நடைப்பயிற்சி உடலுக்கும்
மனதுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்க்கையை வாழ
ஒருவர் சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்யலாம்; இந்த மாற்றங்களுக்கிடையில், காலை நடைப்பயணத்தை தினசரி வழக்கத்தில்
ஒருங்கிணைப்பது மிகவும் நன்மை பயக்கும். பாதகமான பக்கவிளைவுகள் இல்லாத, எல்லா வயதினருக்கும் ஏற்ற பதில் இது. அலுவலகத்துக்கு
செல்லும் போது, வீட்டு வேலைகளுக்கு இடையில் பள்ளிக்கு
செல்வது என்று எல்லோருமே அவர்களால் இயன்ற அளவு
நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
நடைபயிற்சி
செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.
பல உடல்நல
பிரச்சனைக்கும் பொதுவாக பரிந்துரைக்கப்படுவது தினசரி நடைபயிற்சி செய்யுங்கள்
என்பதுதான். காலையில் எழுந்ததும் நடைபயிற்சி செய்யும் பழக்கம் பலரிடமும் உள்ளது.
ஆனால் ஏராளமானோர் சிந்திப்பது 40 அல்லது 50
வயதுக்கு மேல் தான் வாக்கிங் செல்ல வேண்டும் இப்போது
எதற்கு என சிந்திக்கிறார்கள். வாக்கிங் என்பது அனைத்து வயதிலும் செய்யவேண்டிய
ஒன்றாகும். இதனால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
தினமும் காலையில் சிறிது தூரம் நடக்கும் இந்த நடைமுறையை பின்பற்றினால் உடல் ரீதியாக மட்டுமின்றி மனதளவிலும் பல நன்மைகளை பெறலாம். பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளில் இருந்தும் வாக்கிங் பயிற்சி உங்களை பாதுகாக்கிறது. அதிகாலை நடைப்பயிற்சி ஏன் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
நடைபயிற்சி
என்பது உடற்பயிற்சியின் முக்கிய அங்கமாகும். இது நாள் முழுவதும் உங்களை
விழிப்புடன் வைத்திருக்கும். இது உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
நடைபயிற்சியின் போது உடல் நிலையான இயக்கத்தில் இருப்பதால், செல்கள் இயல்பை விட அதிக ஆற்றலை உருவாக்குகின்றன. இது
ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. .
எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்
பூங்காவில்
அல்லது கடற்கரையில் குறைந்தது 30 முதல் 50 நிமிடங்கள் நடைபயிற்சி
செய்வது ஒரு நல்ல நடை. காலை நடைப்பயிற்சி உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை
பலப்படுத்தும். உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது. ஏனெனில் நடைப்பயிற்சி உடலின்
ஒவ்வொரு பாகத்தையும் தூண்டுகிறது. அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.
நேர்மறையான மனநிலையை உருவாக்குகிறது. மன அழுத்தத்தைக் குறைத்தல், மனச்சோர்வைக் குறைத்தல், நேர்மறை சிந்தனையை உருவாக்குதல், மனநலப் பிரச்சனைகளைக் குறைத்தல்
போன்ற பலன்களை நடைப்பயிற்சி வழங்குகிறது.
தினமும் 30 நிமிடம்
நடக்க ஆரம்பித்தால், சர்க்கரை
நோய் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்கலாம். நடைப்பயிற்சி செய்வதால் உடலில் உள்ள
சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயைக்
கட்டுப்படுத்தலாம். நடைப்பயிற்சியானது உடலில் உள்ள அனைத்து முக்கிய தசைகளையும்
வேலை செய்ய தூண்டும் ஆற்றல் கொண்டது. இது தசை ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது.
இந்நிலையில், தினமும் 10 ஆயிரம் அடிகள் நடக்கும் இளைஞர்களுக்கு மாரடைப்புக்கான அபாயம் குறைவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
`நடப்பதற்கும், இதய ஆரோக்கியத்திற்கும்
என்ன தொடர்பு என்றால், நம்
முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியில் உள்ள தசைகளுக்கும் (சோலியஸ்), நமது இதயத்திற்கும்
நரம்புகள் மூலம் தொடர்பு உள்ளது. சோலியஸ்
ஒரு முக்கிய செயல்பாட்டை கொண்டுள்ளது. உடல் முழுவதும் இரத்தத்தை பம்ப் செய்து
எடுத்து செல்லும் பணியில் இதயத்திற்கு உதவுகிறது. கெண்டைக்கால் தசையான சோலியஸில் அதிக
அளவிலான தசை நார்கள் உள்ளன. மேலும், அந்த
தசை நார்களில் ஆற்றல் உருவாக்கத்திற்கு முக்கியமாக தேவைப்படும் மைட்டோகாண்ட்ரியா
உள்ளது. அதிக எண்ணிக்கையிலான மைட்டோகாண்ட்ரியா இருப்பதால், நம் செயல்பாடுகள் மூலம் அதை தூண்டும் போது, அதிக அளவு ஆற்றலை உருவாக்கும். நடப்பதால் தசைகளின் செயல்பாடு ஆக்டிவ்வாக
இருக்கும், அதன்
மூலம் இதயத்தின் செயல்பாடு அதிகரிக்கும். இந்தத் தசைகளின் செயல்பாடு அதிகரிக்க
வேண்டும் என்றால், ஒன்று
நடக்க வேண்டும் அல்லது ஓட வேண்டும். தொடர்ந்து நடப்பதன் மூலம் இதயத்தில் இருக்கும்
சிறிய அளவிலான அடைப்புகள் கூட நீங்கும் வாய்ப்பு உள்ளது.
மொத்தத்தில், நடைபயிற்சி
உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் சாதாரண உடல் செயல்பாட்டை
பராமரிக்க உதவுகிறது. நடைப்பயிற்சி அனைத்து வயதினருக்கும் அவர்களின் நல்வாழ்வை
மேம்படுத்தவும், உடல்நல அபாயங்கள் மற்றும் நோய்களிலிருந்து
அவர்களைப் பாதுகாக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
0 comments:
Post a Comment