டிஜிட்டல் மார்க்கெட்டிங்
மின்னணு தொழில்நுட்பத்தின்
மூலம் வாடிக்கையாளர்களுடன் இணைவதற்கான ஒரு உத்தியாக டிஜிட்டல்
மார்க்கெட்டிங் என்பதை வணிகங்கள் வரையறுக்கின்றன. இந்த முறையின் மூலம், அவர்கள் வெவ்வேறு ஆன்லைன் மன்றங்கள் மூலம் வருங்கால வாடிக்கையாளர்களுக்கு
சேவைகள் அல்லது தயாரிப்புகளை தொடர்பு கொள்கிறார்கள், ஊக்குவிக்கிறார்கள்
மற்றும் விற்கிறார்கள்.டிஜிட்டல் மார்க்கெட்டிங் வகைகள்
உங்களிடம் கணினி அல்லது ஸ்மார்ட்போன் இருந்தால், நம்மில்
பலர் செய்வது போல், நீங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங்
அனுபவித்திருப்பீர்கள். இது உங்கள் இன்பாக்ஸில் உள்ள மின்னஞ்சலாகவோ, கூகுளைப் பயன்படுத்தும் போது கிடைத்த தேடல் முடிவாகவோ, Facebook இல் விளம்பரமாகவோ, உங்கள் மொபைலுக்கு அனுப்பப்பட்ட
குறுஞ்செய்தியாகவோ அல்லது Instagram இல் செல்வாக்கு செலுத்துபவர்களின்
இடுகையாகவோ இருக்கலாம். நீங்கள் பார்க்க முடியும் என, இணைய
மார்க்கெட்டிங் என்பது பல துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு விரிவான துறையாகும்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் முக்கிய வடிவங்கள்:
Search Engine Optimization (SEO)
நமக்கு எந்த தகவல்கள் வேண்டுமென்றாலும் பெரும்பாலும் கூகுள், யாஹூ போன்ற இணைய தேடு பொறிகள் (search engine) மூலமே
தேடுகிறோம். ஒரு தொழில் அதிகமான
வாடிக்கையாளர்களை பெறவேண்டுமென்றால், அதன்
இணையதளங்கள் தேடு பொறியின் பக்கங்களில் இடம்பெறவேண்டும். தேடுபவர்கள் பெரும்பாலும்
முதல் 4 பக்கங்களில் என்ன இணையத்தளங்கள் இடம்பெறுகிறதோ அதை
மட்டுமே அணுகுவர்.
இதனால் தொழிலின் இணையத்தளத்தை தேடு பொறியின் முன்னணி பக்கங்களில்
இடம்பெறச் செய்வது முக்கியம். இதற்காக
என்ற Search Engine Optimization (SEO) உத்திகள் பயன்படுத்தப்படுகிறது. Search Engine Optimization (SEO) மூலம் இணைய தளத்தை தேடு பொறியின் முன்னணி பக்கத்தில் கொண்டுவரலாம்.
சமூக ஊடக சந்தைப்படுத்தல் (SMM)
சமூக ஊடக சந்தைப்படுத்தல் என்பது டிஜிட்டல் மார்க்கெட்டிங்
ஒரு பகுதியாகும், இது
பயனர்களை வலைத்தளத்திற்கு இயக்க சமூக ஊடக தளத்தைப் பயன்படுத்துகிறது. சமூக
ஊடகங்கள் மற்றும் சமூக வலைப்பின்னல்களின் பயன்பாடு ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு
கூடை மற்றும் சேவைகளை விளம்பரப்படுத்துவதாகும். சமூக ஊடக மார்க்கெட்டிங்
முக்கியமாக வாடிக்கையாளர்களை சென்றடைவதற்காக பயனர் தொடர்பு மற்றும் பிராண்ட்
அங்கீகாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. நீங்கள் இணையதள போக்குவரத்து
மற்றும் முக்கிய இணையதளங்களில் இருந்து சேவைகளை வாங்கலாம். Instagram பின்தொடர்பவர்கள், Facebook கருத்துகள்
மற்றும் YouTube சந்தாதாரர்கள்
போன்றவை. சமூக ஊடக சந்தைப்படுத்தல் வகைகள் உங்கள் வாடிக்கையாளர்கள், முன்னணிகள்
மற்றும் வாய்ப்புகளுடன் ஈடுபட உங்களுக்கு உதவும்.
Email
Marketing
வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்பு மற்றும் சேவையை பற்றி தெரியப்படுத்த அவர்களின் ஈமெயில் முகவரிக்கு தகவல்களை அனுப்புவது Email Marketing ஆகும். பல ஈமெயில் மார்க்கெட்டிங் நிறுவனம் மூலம் மொத்தமாக மின்னஞ்சல்களை
அனுப்பலாம். Mailchimp, Aweber, Constant
contact, freshmail, madmimi, icontact போன்ற
பல நிறுவனங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி வரை இலவச சேவையை வழங்குகிறது.
E-Commerce
Marketing :
இந்த வகை மார்க்கெட்டிங்கானது தயாரிப்பு சார்ந்த
நிறுவனங்களுக்கு உகந்த முறையாகும். Amazon, Flipkart, E-bay, Indiamart போன்ற E-Commerce தளங்களில்
உங்கள் தயாரிப்பு அல்லது நிறுவனத்திற்கென தனி பக்கத்தை உருவாக்கி அதில் உங்கள்
தயாரிப்புகளின் விவரங்களை பதிவு செய்யலாம்.
இன்றைய சூழ்நிலையில் அதிகப்படியானோர் ஆன்லைன்
ஷாப்பிங் செய்வதயே விரும்புகின்றனர். அதற்கு காரணம் Amazon, Flipkart போன்ற
நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் பொருட்களை தருவதே ஆகும்.
எனவே இம்மாதிரியான E-Commerce தளங்களில்
உங்களது தயாரிப்பை பதிவு செய்வதால் வியாபாரம் அதிகரிக்க அதிக வாய்ப்பு உண்டு.
ஆனால் உங்களது ஒவ்வொரு விற்பனைக்கும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அந்த E-Commerce தளம்
எடுத்துவிட்டு தான் மீதம் உள்ள தொகையை உங்களுக்கு தரும்.
Mobile Marketing
பெரும்பான்மையானவர்கள் இணையத்தை
மொபைல் மூலமே பயன்படுத்துகின்றனர். எனவே Mobile Marketing செய்வது தொழிலுக்கு மிகவும்
அவசியமாகிறது. Push notifications இது ஒருவகையான மொபைல் மார்க்கெட்டிங் ஆகும். இதன் மூலம் வாடிக்கையாளரின்
மொபைல்க்கு நேரடியாக தகவல், செய்திகள் போன்ற அறிவிப்புகளை
அனுப்பலாம். pushengage.com, foxpush.com, pushcrew.com, போன்ற சேவை நிறுவனங்கள்
குறிப்பிட்ட மொபைலுக்கு அறிவிப்பை அனுப்ப இலவச சேவையை அளிக்கின்றன.
தயாரிப்பு மற்றும் சேவையை
சந்தைப்படுத்த செய்ய App based marketing (android
& iOs App), Mobile search ads, Mobile
image ads, Location-based marketing, SMS, QR
codes, In-game mobile marketing போன்ற பல மொபைல்
மார்க்கெட்டிங்களை பயன்படுத்தலாம்.
இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறைகளை பயன்படுத்தி உங்களது தயாரிப்பு அல்லது சேவையை குறைந்த செலவில் அதிக வாடிக்கையாளர்களை சென்று சேர்த்து அதிக லாபத்தை ஈட்டுங்கள்.
0 comments:
Post a Comment