Saturday, January 7, 2017

எக்செல் ஒன்றிணைப்பு.

எக்செல் தாளில் தனித்தனி செல்லில் இருக்கும் தரவுகளை நாம் விரும்பும்படி ஒரே செல்லில் ஒன்றிணைப்பது எப்படி?
                                        
                                         எக்செல் தாளில் தனித்தனி செல்லில் இருக்கும் தரவுகளை நாம் விரும்பும்படி  கமா, செமிக்கோலன், ஸ்லேஷ் போன்ற குறியீடுகளால் பிரித்து ஒரே செல்லில் கொண்டுவரமுடியும்.
                                         எடுத்துக்காட்டாக   DATE   MONTH   YEAR   என்று தனித்தனி மூன்று கலனில் இருக்கு  எண்களை ஒரே கலனில் நாம் விரும்பும்  புள்ளி அல்லது  ஸ்லேஷ்(/)  போன்ற குறியீடுகள் மூலம் பிரித்து ஒரே கலனில் கொண்டு வர கீழ்கண்ட முறையை பயன்படுத்தலாம்.
                                    எடுத்துக்காட்டாக   கலன் A1 ல்  DATE கலன் B1ல்  MONTH கலன் C1 ல் YEAR     என இருக்க இந்த மூன்று தரவுகளும்  கலன்  E1 ல்  ஸ்லேஷ் பயன் படுத்தி ஒன்றிணைக்க   E1 ல் பயன்படுத்த வேண்டிய சூத்திரம்
=A1&”/”&B1&”/”&C1

மேற்கண்ட சூத்திரத்தில்  " / " க்கு பதிலாக நாம் விரும்பும் குறியீட்டைப் பயன்படுத்தி ஒன்றிணைக்கலாம்.



Author : MGG // 9:48 PM

1 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

 
Powered by Blogger.