ஒரு செல்லில் இருக்கும் தரவுகளை மூன்று செல்களில் எவ்வாறு பிரிப்பது?
எடுத்துக்காட்டாக ஒரு செல்லில் இருக்கும் 28/04/1966 என்ற தேதியை மூன்று செல்களில் தேதி,
மாதம், ஆண்டு என தனித்தனி செல்லில் பிரிக்க நாம் அந்த மூன்று செல்களிலும் LEFT, MID, RIGHT என்ற FUNCTION
பயன்படுத்தவேண்டும்.
A2 என்ற செல்லில் 28/04/1966 என்ற தேதியை பிரிக்க.
முதல் செல்லில் =LEFT பயன் படுத்தும் முறை.
=LEFT(A2,2)
A2 என்பது பிரிக்கவேண்டிய தரவு உள்ள செல்லின் அமைவிடம்.
2, என்பது (LEFT) இடது பக்கத்தில் எத்தனை இலக்கங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும்
என்பது.
நடு செல்லில் மாதம் 04 வர MID என்ற FUNCTION
பயன்படுத்தவேண்டும்.
=MID(A2,4,2)
A2 என்பது பிரிக்கவேண்டிய தரவு உள்ள செல்லின் அமைவிடம்.
4, என்பது நமக்கு தேவையான இலக்கத்தின் முதல் எண்ணின் அமைவிடம்.
28/04/1966
தேதியில் 4வது இருப்பிடத்தில் 0 உள்ளது.
2, என்பது நமக்கு தேவையான எண்ணின்
இலக்க எண்ணிக்கை.( 04 இரண்டு இலக்கம்)
கடைசி செல்லில் ஆண்டு வரவேண்டும்
அதற்கு RIGHT என்ற FUNCTION பயன்படுத்தவேண்டும்.
=RIGHT(A2,4)
A2 என்பது பிரிக்கவேண்டிய தரவு உள்ள செல்லின் அமைவிடம்.
4 என்பது நமக்கு தேவையான ஆண்டின்
(1966) இலக்கங்களின் எண்ணிக்கை.
இவ்வாறாக ஒரு தனி செல்லில் இருக்கு
தரவை மூன்று தனித்தனி செல்களில் பிரித்து பயன்படுத்தலாம்.
0 comments:
Post a Comment